×

மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்… கண்ணீரில் கதறும் ரசிகர்கள்…தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் இரங்கல்..!!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். பொதுவாழ்வில் ‘சொக்கத்தங்க’மாய் ஜொலித்தவர் விஜயகாந்த். ரசிகர் மனதில் ‘வானத்தை போல’ உயர்ந்து நிற்பவர். விஜயகாந்தின் உடலுக்கு நாளை மாலை 4.45மணிக்கு இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது. விஜயகாந்தின் உடலை காண சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேடு வரை சாலையின் இருபுறமும் காத்திருந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகில் விஜயகாந்தை போன்ற நல்லவரை பார்க்க முடியாது என திரைத்துறையினர் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

ஈடு இணையில்லாத தலைவரை இழந்துவிட்டதாக தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே, விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தொடங்க இருந்த மார்கழியில் மக்களிசை முதல் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்கழியில் மக்களிசை இன்று முதல் 3 நாட்கள் நடைபெற இருந்த நிலையில் முதல் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைவுக்கு தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்: தமிழ் மக்களுக்காக கர்ஜித்த விஜயகாந்த் குரல் என்றும், எல்லோர் செவிகளிலும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும் என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவர், தமிழ்த் திரை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த, மிகச் சிறந்த மனிதநேயப் பண்பாளர், புரட்சி கலைஞர் மதிப்புமிகு ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள், மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். தமிழ் மக்களுக்காக கர்ஜித்த அந்த குரல் என்றும், எல்லோர் செவிகளிலும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தயாநிதி மாறன் இரங்கல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மறைவை அறிந்து அதிர்ச்சியுற்றேன்; அவரது குடும்பத்தினர், நண்பர்கள், தேமுதிக தொண்டர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்… கண்ணீரில் கதறும் ரசிகர்கள்…தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Dayaniti Maran ,Tamizachi Thangabandian ,Chennai ,Dinakaran ,
× RELATED ஏழைகளின் சுருக்குப் பையில் உள்ள...